ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ஆதித்யநாத்
ram-temple-immersion-ceremony-adityanath-clear-order-to-officials
அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்காக, அயோத்தியை மிகவும் தூய்மையான மற்றும் அழகான நகரமாக மாற்றுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஸ்ரீராமபிரான் பிறந்த ஊரான அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
எனவே, ராமர் சிலை பிரதிஷ்டைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜனவரி 15ம் தேதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு, ஜனவரி 16ம் தேதி சிலை பிரதிஷ்டை பூஜை நடைபெறும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு இந்திய பாரம்பரியங்களைச் சேர்ந்த 13 அகாராக்களைச் சேர்ந்த 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் 2,200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காசி விஸ்வநாதர், வைஷ்ணவ தேவி போன்ற முக்கிய கோவில்களின் தலைவர்கள், மத மற்றும் அரசியலமைப்பு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரபல புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ்,
திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி, திரை இயக்குனர் மதுர் பண்டார்கர், பிரபல முன்னணி தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ காமத், இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் தேசாய் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராமர் கோவிலின் சிறப்பு
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. ராமர் கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்கள் உள்ளன. இதேபோல் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகளும் நிறுவப்பட உள்ளன.